search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது உண்மையே - எப்.பி.ஐ முன்னாள் இயக்குநர் பரபரப்பு பேட்டி
    X

    அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது உண்மையே - எப்.பி.ஐ முன்னாள் இயக்குநர் பரபரப்பு பேட்டி

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது உண்மையே எனவும், இது தொடர்பான விசாரணையை அதிபர் டிரம்ப் தடுக்கவில்லை எனவும் எப்.பி.ஐ முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமே பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது உண்மையே எனவும், இது தொடர்பான விசாரணையை அதிபர் டிரம்ப் தடுக்கவில்லை எனவும் எப்.பி.ஐ முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமே பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

    அமெரிக்க புலனாய்வு துறையான ‘எப்.பி.ஐ.’யின் இயக்குனராக இருந்தவர் ஜேம்ஸ் கோமே. இவரை அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார். அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் பிரசார இமெயிலை ரஷியா உதவியுடன் டிரம்ப் திருடியதாக குற்றச்சாட்டு உள்ளது. அது குறித்த விசாரணையில் இவரது செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என நீதித்துறை மெமோ அனுப்பியிருந்தது.



    அதன் அடிப்படையில் கோமே டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் இ-மெயில் விவகாரத்தில் டிரம்புக்கு ரஷியா உதவி செய்த விவகாரத்தை இவர் வெளியிட்டு விடுவார் என பயந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், எப்.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமேயிடம் அதிமுக்கியமான விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது உண்மை என  ஜேம்ஸ் கோமே இன்று கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற சென்ட் அவையில் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு காரணம் எப்.பி.ஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமேதான் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×