search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுகிறதா? அமெரிக்கா - விரைவில் முடிவு என்கிறார் டிரம்ப்
    X

    பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுகிறதா? அமெரிக்கா - விரைவில் முடிவு என்கிறார் டிரம்ப்

    பாரீஸ் பருவநிலை மாநாட்டில் இயற்றப்பட்ட ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர். அந்த ஒப்பந்தத்தின் படி, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள நிலக்கரி மற்றும் அனல் மின்நிலையங்களை மொத்தமாக மூடுவது என்றும், வளரும் நாடுகள் படிப்படியாக மூடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

    இந்த பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு எதிரான மனநிலையை தொடக்கம் முதலே கொண்டிருந்தார்.

    பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பநிலையிலேயே டிரம்ப் இருந்து வந்தார். இந்நிலையில், இந்த ஒப்பந்தத்திலிருது அமெரிக்கா வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வமான உத்தரவுகள் வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவரவில்லை. செய்தியாளர்கள் இதுகுறித்த கேள்விகளை டிரம்பிடம் எழுப்பிய போது, “விரைவில் முடிவு” என பதிலளித்துள்ளார்.
    Next Story
    ×