search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்பை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் புதின் சந்திப்பு
    X

    டிரம்பை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் புதின் சந்திப்பு

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்த இரு தினக்களுக்கு பிறகு, பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சந்தித்துள்ளார்.
    பாரிஸ்:

    பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த ஏப்ரம் மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் அபார வெற்றி பெற்றார்.

    தன்னுடைய பிரச்சார யுக்தியால் யாரும் எதிர் பார்க்காத விதத்தில் மேக்ரான் வெற்றி பெற்றதாக பல்வேறு உலக தலைவர்கள் பாராட்டினர். 

    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சந்தித்துள்ளார். பாரிஸ் நகரத்துக்கு வெளியே உள்ள வெர்சைல்ஸ் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. புதினை மேக்ரான் கை குலுக்கி வரவேற்றார்.

    சந்திப்புக்கு பின்பு பேசிய மேக்ரான், “ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானது. ஏனெனில், பல்வேறு சர்வதேச பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே உள்ளது. இருப்பினும் உக்ரைன் விவகாரத்தில் சிறிய அளவில் கூட சலுகை காட்ட முடியாது. ஜி-7 நாடுகள் கூட்டமைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வர தயாராக இருந்தோம்” என்றார்.



    முன்னதாக, மேக்ரானை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு தினங்களுக்கு முன்பு சந்தித்தார். டிரம்புக்கு பிறகு அதிபர் புதின் மேக்ரானை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×