search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாயில் புதுமை ‘டெடிபியர்’ பொம்மை சிகிச்சைக்கு தனி ஆஸ்பத்திரி
    X

    துபாயில் புதுமை ‘டெடிபியர்’ பொம்மை சிகிச்சைக்கு தனி ஆஸ்பத்திரி

    துபாயில் ‘டெடிபியர்’ பொம்மைக்கு சிகிச்சை அளிக்க தனி ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பயத்தை போக்க புதுமையான திட்டம் ஒன்றை துபாய் அரசு தீட்டியுள்ளது.

    துபாய்:

    உடல் நலக் குறைவால் அவதிப்படும் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள அச்சப்படுகின்றனர். அவர்களின் அச்சம் மற்றும் பயத்தை போக்கவும், மருத்துவ சிகிச்சைகளை அறியவும் பள்ளி குழந்தைகளுக்கு புதுமையான திட்டம் ஒன்றை துபாய் அரசு தீட்டியுள்ளது.

    பொதுவாக குழந்தைகள் பஞ்சினால் உருவாக்கப்பட்ட பலவிதமான ‘டெடிபியர்’ பொம்மைகளை வைத்து விளையாடி மகிழ்கின்றனர். அவை பழுதாகி கிழிந்த நிலையில் பிரியமனமின்றி வேறு பொம்மையுடன் விளையாடுகின்றனர்.

    அத்தகைய பொம்மைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி அவற்றை சிகிச்சைக்காக அவைகளே டாக்டரிடம் எடுத்துச் செல்ல ஒரு தனி ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டுள்ளது.

    தங்கள் பொம்மைகளுடன் செல்லும் குழந்தைகள் அவற்றை டாக்டரிடம் காட்டி சிகிச்சை அளித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும் வகையில் ஆஸ்பத்திரி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. அதில் துபாய் அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துணை அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 4 குழந்தைகள் கலந்து கொண்டனர்.


    அவர்கள் தங்களது டெடிபியர் பொம்மையை கொண்டு வந்து டாக்டர்களிடம் காட்டி அதற்கு சிகிச்சை பெற்றனர். சி.டி.ஸ்கேன், எடுத்து அறுவை சிகிச்சை செய்தனர். முன்னதாக பொம்மைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் பொம்மையை சிறிது நேரத்தில் எடுத்து வீட்டுக்கு சென்றனர்.

    முன்னதாக டாக்டரிடம் தங்களது பொம்மையின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்தனர். இதன் மூலம் தங்களது உடல் நலம் பேணுதல், சுகாதார அடிப்படை கல்வி, மற்றும் சிகிச்சை முறைகளை குழந்தைகள் அறிய முடியும். ஆஸ்பத்திரிக்கு வருவதில் உள்ள பயம் நீங்கும் என டாக்டர்கள் கருதுகின்றனர்.

    Next Story
    ×