search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா சென்று, திரும்பும் அனைத்து விமானங்களிலும் லேப்டாப் எடுத்துச் செல்ல விரைவில் தடை
    X

    அமெரிக்கா சென்று, திரும்பும் அனைத்து விமானங்களிலும் லேப்டாப் எடுத்துச் செல்ல விரைவில் தடை

    உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று, திரும்பும் அனைத்து விமானங்களிலும் லேப்டாப் எடுத்துச் செல்ல விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜான் கெல்லி தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:
     
    அமெரிக்கா முழுக்க இயங்கி வரும் அனைத்து விமான நிலையங்களுக்கும் உலகின் அனைத்து நாடுகளில் இருந்து வந்து செல்லும் விமானங்களில் லேப்டாப் கொண்டு செல்ல விரைவில் தடை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜான் கெல்லி தெரிவித்துள்ளார். 

    அமெரிக்கா வந்து, செல்லும் அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்கள் நிறைந்துள்ள விமானத்தைத் தகர்ப்பதில் தீவிரவாதிகள் ஆர்வம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 



    ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் துருக்கி ஆகியவற்றின் 10 விமானநிலையங்களில் இருந்து லேப்டாப் எடுத்துவர அமெரிக்க அரசு மார்ச் மாதத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது. நவீன ரக அபாயம் அச்சுறுத்தி வருவதால் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் தேதி குறித்து அவர் எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

    அந்நாட்டு உளவுத்துறை தொடர்ந்து வழங்கிவரும் தகவல்களை வைத்தே பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதாகவும் ஜான் கெல்லி கூறினார். ஏற்கனவே பல விமான நிலையங்களில் கைப்பைகளை சோதிப்பது நடைமுறையில் இருக்கிறது. இதை நாடு முழுவதும் விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×