search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான்: ரமலான் நோன்பு மாதத்தில் முதல் தாக்குதல் - கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி
    X

    ஆப்கானிஸ்தான்: ரமலான் நோன்பு மாதத்தில் முதல் தாக்குதல் - கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி

    தீவிரவாத அச்சுறுத்தல் தலைவிரித்து ஆடும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ரமலான் நோன்பு மாதம் பிறந்த முதல் நாளான இன்று தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலுக்கு 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    காபுல்:

    தீவிரவாத அச்சுறுத்தல் தலைவிரித்து ஆடும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ரமலான் நோன்பு மாதம் பிறந்த முதல் நாளான இன்று தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலுக்கு 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் மாகாணத்தில் உள்ள கால்பந்து மைதானத்தின் அருகே இன்று நடந்த இந்த தாக்குதலில் 18 பேர் உடல் சிதறி பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நாட்டின் வடமேற்குப்பகுதியில் உள்ள பட்கிஸ் மாகாணம் காடிஸ் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும், இடையே இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 22 தீவிரவாதிகள், 6 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 8 பேர் பலியாகினர்.

    இரு தரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்கள் உள்பட சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
    Next Story
    ×