search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசுக்கு எதிரான செய்திகள் வெளியிட்டதாக எகிப்தில் ஊடக இணையதளங்கள் முடக்கம்
    X

    அரசுக்கு எதிரான செய்திகள் வெளியிட்டதாக எகிப்தில் ஊடக இணையதளங்கள் முடக்கம்

    அரசுக்கு எதிராக தீவிரவாதம் மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவதாக கூறி எகிப்து நாட்டில் முக்கிய ஊடக இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
    கெய்ரோ:

    அரசுக்கு எதிராக தீவிரவாதம் மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவதாக கூறி எகிப்து நாட்டில் முக்கிய ஊடக இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

    எகிப்து நாட்டில் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டதாக கூறி கத்தார் நாட்டின் அல்-ஜசீரா செய்தி தொலைக்காட்சி சேனல் உள்ளிட்ட பல ஊடக வலைதளங்களை எகிப்து அரசு முடக்கியது.

    கடந்த 2013-ஆம் ஆண்டு ராணுவத்தால் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு தடைசெய்யப்பட்ட முஸ்ஸிம் சகோதரத்துவ இயக்கத்துக்கு ஆதரவாக அல்-ஜசீரா தொலைக்காட்சி செயல்பட்டு வருவதாக எகிப்து அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, அந்த செய்தி தொலைக்காட்சி முடக்கப்பட்டது. மேலும், புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வந்த "மதமஸர்' என்னும் ஊடகமும் முடக்கப்பட்டது.

    முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு ஆதரவாக துருக்கியிலிருந்து செயல்பட்டு வரும் அல்-ஷார்க் வலைதளம் உள்ளிட்ட
    எகிப்தில் மொத்தம் 21 செய்தி வலைதளங்கள் முடக்கப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். எகிப்து அரசின்  இந்த நடவடிக்கைக்கு ஊடகங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×