search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைதிப்படையின் இரண்டு இந்திய வீரர்களுக்கு ஐ.நா. விருது
    X

    அமைதிப்படையின் இரண்டு இந்திய வீரர்களுக்கு ஐ.நா. விருது

    பணியின்போது உயிரிழந்த 2 இந்திய அமைதிப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஐ.நா. விருது வழங்கப்பட்டது. விருதுகளை ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி பெற்றுக்கொண்டார்.
    நியூயார்க்:

    பணியின்போது உயிர்நீத்த அமைதிப் படை வீரர்களுக்கு ஐ.நா. சபை ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
    அவ்வகையில், சர்வதேச ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினமான இன்று, அமைதிப்படை வீரர்களுக்கு இறப்புக்குப் பின்னர் வழங்கப்படும் ஐ.நா. விருதுகள் வழங்கப்பட்டன.

    காங்கோவில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றி கடந்த ஆண்டு உயிர்நீத்த இந்திய வீரர் பிரிஜேஸ் தாப்பா மற்றும் லெபனானில் பணியாற்றி உயிர்நீத்த மற்றொரு இந்திய வீரர் ரவிக்குமார் ஆகியோருக்கு டேக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் விருது வழங்கப்பட்டது. இந்த வீரர்கள் சார்பில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதின் விருதுகளை பெற்றுக்கொண்டார்.

    இன்று நடந்த நிகழ்ச்சியில் மொத்தம் 43 நாடுகளைச் சேர்ந்த 117 வீரர்களுக்கு டேக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக உயிர்நீத்த அமைதிப்படை வீரர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அஞ்சலி செலுத்தினார்.

    ஐ.நா. அமைதி படையில் இந்தியாவை சேர்ந்த 7600-க்கும் மேற்பட்ட ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ஆப்கானிஸ்தான், காங்கோ, ஹைத்தி, லெபனான், லைபீரியா, மத்திய கிழக்கு, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்திய அமைதிப் படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ஐ.நா. அமைதிப் பணியின்போது இதுவரை 168 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×