search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் மண் எடுத்து வந்த ‘பை’ ஏலம்
    X

    விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் மண் எடுத்து வந்த ‘பை’ ஏலம்

    அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் இருந்து மண் எடுத்து வந்த ‘பை’ வருகிற ஜூலை 12-ந்தேதி ஏலம் விடப்படுகிறது. எனவே அந்த பை ரூ.25 கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் ஆல்டிரின் ஆகியோர் சந்திரனுக்கு அப்பல்லோ- 2 விண்கலம் மூலம் கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக சென்று வந்தனர்.

    அப்போது சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் அங்கிருந்து மண், பாறைகளை சேகரித்து அவற்றை ஒரு பையில் எடுத்து வந்தார்.

    அதில் 500 கிராம் மண், 12 பாறை படிவங்கள் போன்றவை இருந்தன. இவை சந்திரனில் 5 பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டவை. இவை நினைவு சின்னங்களாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே சந்திரனில் இருந்து மண் எடுத்து வரப்பட்ட ‘பை’ வருகிற ஜூலை 12-ந்தேதி ஏலம் விடப்படுகிறது. நியூயார்க்கில் உள்ள ‘சோத்பீ’ மையத்தில் ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    ஏலத்தில் விடப்படும் பை

    அந்த பையில் சந்திரனின் மண் துகள்கள் உள்ளன. பையுடன் அதுவும் சேர்ந்து இருப்பதால் அப் ‘பை’ ஒரு நினைவு சின்னமாக கருதப்படுகிறது.

    எனவே அந்த பை ரூ.25 கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஏலம் அப்பல்லோ-2 விண்கலம் சந்திரனில் இருந்து பூமியில் தரை இறங்கிய ஜூலை 20-ந்தேதி அன்று ஏலம் விடப்படுகிறது.
    Next Story
    ×