search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும் - சவூதியில் டிரம்ப் பேச்சு
    X

    தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும் - சவூதியில் டிரம்ப் பேச்சு

    சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என பேசியுள்ளார்.
    ஜெட்டா:

    சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என பேசியுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் அயல்நாட்டு பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளார். அவருடன் மனைவி மெலினா டிரம் உள்ளிட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகள் சென்றுள்ளனர். நேற்று, அந்நாட்டு மன்னர் சல்மானை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ராணுவ தளவாடங்களை வாங்க சவூதி அரேபியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பின்னர், டிரம்ப் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதில் பங்கேற்று பேசிய டிரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும் என பேசினார்.

    மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக நடக்கும் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக அனைத்து நாடுகளும் கை கோர்க்க வேண்டும் எனவும் டிரம்ப் பேசினார்.
    Next Story
    ×