search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை
    X

    வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை

    அரசுக்கு எதிராக சதி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    டாக்கா:

    அரசுக்கு எதிராக சதி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, வங்காள தேச தேசிய கட்சி தலைவரான இவர் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.

    இந்த நிலையில், இவரது கட்சி அலுவலகத்தில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த அலுவலகம் தலைநகர் டாக்காவில் குல்ஷான் பகுதியில் உள்ளது. இங்கு சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது.

    இதற்கு கலிதாஜியா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சி தலைவன் கலிதாஜியாவை மனரீதியாக துன்புறுத்தவே தேவையற்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்றனர்.

    ஆனால், அரசுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய ஒரு லாரி புத்தகங்கள் கலிதாஜியாவின் கட்சி அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. எனவே கோர்ட்டு உத்தரவுபடி சோதனை நடத்தப்பட்டது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×