search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் புதிய அதிபர் நாளை இத்தாலி பிரதமருடன் சந்திப்பு
    X

    பிரான்ஸ் புதிய அதிபர் நாளை இத்தாலி பிரதமருடன் சந்திப்பு

    பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபர் இம்மானுவேல் மக்ரான், பாரிசில் நாளை இத்தாலி பிரதமர் பாவோலோ ஜென்டிலோனியை சந்தித்து பேச உள்ளார்.
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க சமீபத்தில் நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் ‘என் மார்ச்சே’ கட்சியின் தலைவர் இம்மானுவேல் மக்ரான் வெற்றி பெற்றார். முன்னாள் பொருளாதார மந்திரியான இவருக்கு ஆதரவாக 66.1 சதவீத வாக்குகள் பதிவாகின. அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணியின் பெண் வேட்பாளர் மரின் லீ பென் 33.9 சதவீத வாக்குகள் பெற்றார்.

    புதிய அதிபராக பதவியேற்ற மக்ரான், கடந்த திங்கட்கிழமை பெர்லின் நகரில் ஜெர்மன் வேந்தர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசினார். அப்போது, ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்புக்கான திட்டம் குறித்து பேசியுள்ளனர். பாரிசில் புதன்கிழமை நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்கை சந்தித்து பேசினார்.

    இந்நிலையில், நாளை நடைபெற உள்ள விருந்து நிகழ்ச்சியில் இத்தாலி பிரதமர் பாவோலோ ஜென்டிலோனியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வளர்ச்சிக்கான நெருங்கிய ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனை நடத்தலாம் என தெரிகிறது.
    Next Story
    ×