search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெந்நிற உடைகளுடன் கைகளில் ரோஜா பூக்களை ஏந்தி வெனிசுலா பெண்கள் நூதனப் போராட்டம்
    X

    வெந்நிற உடைகளுடன் கைகளில் ரோஜா பூக்களை ஏந்தி வெனிசுலா பெண்கள் நூதனப் போராட்டம்

    நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்ட அதிபர் நிக்கோலஸ் மடுரோவை நீக்கும் வகையில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெந்நிற உடைகளுடன் கைகளில் ரோஜா பூக்களை ஏந்தி வெனிசுலா பெண்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கராக்கஸ்:

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவை ஆட்சிப் பொறுப்பில் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒரு பிரிவினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாட்டின் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்ட அதிபர் நிக்கோலஸ் மடுரோ, சர்வாதிகாரிபோல் ஆட்சி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சியினரும் கடந்த ஆறுமாத காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

    அரசை எதிர்த்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சீரழிந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சிறப்பாக கட்டமைக்க வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெற வேண்டும் என்பது இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த போராட்டத்தில் இருதரப்பிலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் தனது அரசை கவிழ்க்க சில தீவிரவாதிகள் முயற்சித்து வருவதாக அதிபர் நிக்கோலஸ் மடுரோ குற்றம்சாட்டி வருகிறார்.



    இந்நிலையில், உடனடியாக அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெந்நிற உடைகளுடன் கைகளில் ரோஜா பூக்களை ஏந்தி வெனிசுலா நாட்டுப் பெண்கள் நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    நாட்டின் பல முக்கிய நகரங்களில் நேற்று நடந்த இந்த போராட்டத்தின்போது வெனிசுலா தேசிய கீதத்தை பாடியவாறு ஊர்வலமாக சென்ற பெண்களை தடுக்க முயன்ற பாதுகாப்பு படையினருக்கு காதலின் சின்னமான ரோஜாப் பூக்களை தந்தனர். 

    அவர்களை கைது செய்யவும் முடியாமல் தடுத்து நிறுத்தவும் இயலாமல் பாதுகாப்பு படையினர் அசடு வழியும் காட்சிகள் பிரபல ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
    Next Story
    ×