search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியாவில் நான்கு கார்களை இடித்துத்தள்ளி தலைகீழாக கவிழ்ந்த பஸ்: 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
    X

    இந்தோனேசியாவில் நான்கு கார்களை இடித்துத்தள்ளி தலைகீழாக கவிழ்ந்த பஸ்: 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

    இந்தோனேசியாவின் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இடித்துத் தள்ளி பஸ் தலைகீழாக உருண்டது.
    இந்தோனேசியாவின் ஜகார்தாவில் இருந்து தெற்கே 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சியான்ஜூர் மாவட்டம். இங்கே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த நான்கு கார்கள் மீது பயங்கரமாக மோதியது.

    அத்துடன் ரோட்டில் சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இடித்துத் தள்ளிய பஸ், இறுதியில் ஒரு பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயம் அடைந்தனர்.

    பஸ் கட்டுப்பாட்டை இழப்பதற்கு பிரேக் பிடிக்காதது காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றன. இந்தோனேசியாவில் பராமரிப்பு சரியில்லாத காரணத்தில் அடிக்கடி பஸ் விபத்து நிகழ்ந்து வருவது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.
    Next Story
    ×