search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொனால்ட் டிரம்ப்
    X

    வாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொனால்ட் டிரம்ப்

    அணு ஆயுத ஏவுகணைகளை வைத்து அச்சுறுத்திவரும் வட கொரியாவுடனான அமெரிக்காவின் மோதல் போக்கு பெரும் சேதத்தில் போய் முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

    இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. எனினும், அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

    தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தங்கள் நாட்டின்மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக குற்றம்சாட்டி வரும் வடகொரியா, அமெரிக்காவை அழித்து விடுவோம் என்று மிரட்டியுள்ளது.

    அமெரிக்காவை சீண்டிப் பார்த்து, சண்டைக்கு அழைக்கும் வட கொரியாவின் எரிச்சலூட்டும் செயல்களால் சமீபகாலமாக அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில் தென் கொரியாவில் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு கவன் நிறுவும் பணிகளை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் அணு ஆயுத ஏவுகணைகளை வைத்து அச்சுறுத்திவரும் வட கொரியாவின் மோதல் போக்கு பெரும் சேதத்தில் போய் முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    வட கொரியாவுடனான பிரச்சனைகளை ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலமாகவே தீர்த்துகொள்ள அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், இது மிகவும் கடினமாக இருக்கும் என தெரிகிறது. எனவே, பெரும் சேதத்துக்கு பின்னரே இதற்கு தீர்வு ஏற்படும் என தோன்றுகிறது.


    வட கொரியாவின் அத்துமீறல்களை தட்டிக் கேட்பதில் அக்கறை காட்டிவரும் சீன அதிபர் க்சி ஜின்பிங் மிகவும் நல்ல மனிதர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மிகவும் கடினமாக அவர் முயன்று வருகிறார். அவரால் ஏதாவது செய்ய முடியும் என்பது எனக்கு தெரியும். ஆனால், அநேகமாக அது முடியாமல் போகலாம். ஆனால், ஏதாவது செய்ய வேண்டும் என அவர் விரும்புவதாகவே நான் கருதுகிறேன் என டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    வட கொரியா தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை நடத்தினால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்க தாயாராக இருப்பதாக சீன அரசு சமீபத்தில் எச்சரித்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த பேட்டி முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×