search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் காதலியை கொன்றதாக வழக்கு: இந்திய வம்சாவளி ராணுவ வீரருக்கு 22 ஆண்டு சிறை
    X

    முன்னாள் காதலியை கொன்றதாக வழக்கு: இந்திய வம்சாவளி ராணுவ வீரருக்கு 22 ஆண்டு சிறை

    முன்னாள் காதலியை கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி ராணுவ வீரருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் எடின்பர்க் பகுதியை சேர்ந்தவர் ஹாரி தில்லான் (வயது 26). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து ராணுவ வீரர் ஆவார்.

    இவர் ரக்ளஸ் (24) என்ற பெண்ணை இணையதள வழியாக அறிமுகமாகி, காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

    ஆனால் தில்லான், ரக்ளசை விடாமல் துரத்தி வந்துள்ளார். ஒரு நாள் இரவு நேரத்தில் ரக்ளஸ்சின் வீட்டுக்கு பின்புற வழியாக சென்று, அவரது படுக்கை அறை கதவைத்தட்டி, பூக்களையும், சாக்லெட்டுகளையும் வைத்து விட்டு வந்திருக்கிறார்.

    தில்லான், பிரிந்து போன தனது காதலியிடம் இருந்து விலகி இருக்குமாறு அவரது உயர் அதிகாரி அறிவுறுத்தியும் உள்ளார். ஆனால் அவர் விலகாமல், தொடர்ந்து பிரச்சினை செய்துவந்துள்ளார். இது தொடர்பாக ஒரு முறை ரக்ளஸ், போலீசில் புகாரும் செய்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி, ரக்ளஸ் வீட்டுக்கு தில்லான் சென்று, அவரது வீடு புகுந்து சமையலறை கத்தியை எடுத்து ரக்ளஸ்சை சரமாரியாக குத்திக்கொன்று விட்டார்.

    இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த நியூகேசில் குரோன் கோர்ட்டு, தில்லானுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்தது. அவர் குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி பால் சுலோன் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். 
    Next Story
    ×