search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலா கொட்டையில் இருந்து சாக்லெட் தயாரிக்க முடியும்: ஆய்வில் தகவல்
    X

    பலா கொட்டையில் இருந்து சாக்லெட் தயாரிக்க முடியும்: ஆய்வில் தகவல்

    ‘கோ கோ’ வுக்கு பதிலாக பலா கொட்டையில் இருந்து சாக்லெட் தயாரிக்க முடியும் என பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
    வாஷிங்டன்:

    ‘கோகோ’ வில் இருந்து சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. அதற்காக சர்வதேச அளவில் 45 லட்சம் டன் கோகோ தேவைப்படுகிறது.

    ஆனால் விவசாயிகளால் அந்த அளவு கோகோ சாகுபடி செய்ய முடியவில்லை. 37 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.

    சாக்லேட் தயாரிக்க இன்னும் 10 ஆண்டுகளில் கூடுதலாக கோகோ தேவைப்படும். அது முடியாத பட்சத்தில் அதை விடுத்து சாக்லேட் நறுமணம் மற்றும் சுவையுடன் மாற்று வழியில் தயாரிக்க முடியுமா? என பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


    இந்த நிலையில், பலாக் கொட்டையில் இருந்து சாக்லேட் தயாரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர். பலாக் கொட்டையில் சாக்லேட்டின் நறுமணம் மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பொருள் மறைந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.


    அதில் இருந்து சாக்லேட் தயாரிக்க பயன்படும் பொருள் உருவாக்க முடியும். இதன் மூலம் கோகோ பற்றாக்குறையால் சாக்லேட் தயாரிப்பில் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×