search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ: நீர் ஆவியாவதை தடுக்கும் முயற்சியில் சொதப்பிய தமிழ்நாடு - அசத்திய அமெரிக்கா
    X

    வீடியோ: நீர் ஆவியாவதை தடுக்கும் முயற்சியில் சொதப்பிய தமிழ்நாடு - அசத்திய அமெரிக்கா

    புவி வெப்பமயமாதலால் ஆவியாகி வறண்டுவரும் நீர்நிலைகளால் ஏற்படும் வறட்சியை தடுப்பதற்காக தமிழக அதிகாரிகள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில் அமெரிக்காவின் சில மாநிலங்கள் தெர்மோகூல் தடுப்பு முறையில் வெற்றி கண்டுள்ளன.
    நியூயார்க்:

    தமிழகத்தின் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது வைகை அணை. 71 அடி உயரமுள்ள இந்த அணையில் தற்போது 23.10 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த அணையின் நீர் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர்.

    மேலும் மதுரை நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. தினசரி 60 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது 40 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த தண்ணீரும் அடுத்த 20 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்.

    எனவே, வைகை அணை தண்ணீர் ஆவியாவதை தடுக்க நீரின் மேற்பரப்பில் தெர்மோகூல் அட்டைகள் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து,கடந்த சனிக்கிழமை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தெர்மோகூல் அட்டைகளை மிதக்க விட்டனர்.



    ஆனால், அந்த அட்டைகள் சிறிது நேரத்திலேயே காற்றில் பறந்து கிழிந்தது. மேலும் பல அட்டைகள் கரையோரம் ஒதுங்கியது.



    ஆனால் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், வைகை அணை நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகூல் மிதக்க செய்வதற்காக ரூ.10 லட்சம் அரசு நிதி செலவிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது ஏற்கக்கூடியது அல்ல. தெர்மோகூல் அட்டை 3 நாட்களில் தண்ணீரில் ஊறி முட்டை போன்று உதிர்ந்து விடும். அதனை மீன்கள் மற்றும் பறவைகள் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். மேலும் அட்டைகள் தண்ணீரில் ஊறி நச்சுத்தன்மைக்கு ஆளாகும்.

    இது தவிர தெர்மோகூல் அட்டையில் இருக்கும் ரசாயன கலவை நீரில் கலந்து மனிதர்களுக்கு நோயை உண்டாக்கும். நிலத்தடி நீரும் பாதிக்கும் எனவே இந்த முயற்சியை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், இதுபோன்ற தெர்மோகூல் பந்துகளின் மூலம் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் பல மாநிலங்கள் நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் ஆவியாக மாறுவதை தடுக்கும் முயற்சிகள் பெரும் பலனை அளித்துள்ளது.

    குறிப்பாக, கடந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தில் நீர்நிலைகள் வறண்டு விடாமல் பாதுகாக்க, இங்குள்ள ஒரு அணையில் கருப்பு நிற தெர்மோ கூல் அட்டையால் தயாரிக்கப்பட்ட சுமார் பத்து கோடி பந்துகள் ஒரே நாளில் கொட்டப்பட்டன.

    இந்த பந்துகள் அணையில் உள்ள நீரின் மேற்பரப்பில் பாசி மண்டலம்போல் பரவி, சூரியனில் இருந்து பாயும் வெப்பமான புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் நீர் ஆவியாவதை தடுத்து நிறுத்தியுள்ளன. இவ்வகையில், சுமார் 113 கோடி லிட்டர் ஆவியாகி வீணாவது, வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுதவிர, பாசி மற்றும் கொசுக்களின் உற்பத்தியை தடுத்து நீரின் தூய்மையும் வெகுவாக பேணி பாதுகாக்கப்பட்டுள்ளது.




    Next Story
    ×