search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டான்ஸ்ரீ நல்லா
    X
    டான்ஸ்ரீ நல்லா

    மலேசிய பிரதமர் திட்டங்களால் இந்தியர்களின் கஷ்டங்கள் சூரியனை கண்ட பனி போல மறையும்: டான்ஸ்ரீ நல்லா

    “மலேசிய பிரதமர் அறிவித்த திட்டங்களால் இந்தியர்களின் கஷ்டங்கள் இனி சூரியனை கண்ட பனி போல மறையும்”, என்று டான்ஸ்ரீ நல்லா அறிவித்தார்.
    கோலாலம்பூர்:

    மலையகத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்த இந்திய சமூகத்தை கவுரவிக்க பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி அதனை நிறைவேற்றி வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் ‘இந்திய சமூகத்திற்கான பெருந்திட்டம்’ ஒன்றை பிரதமர் அறிவித்து உள்ளார்.

    ‘இந்திய சமூகத்திற்கான பெருந்திட்டம்’ மனதுக்கு நிறைவை அளிப்பதாக மலேசிய இந்திய ஐக்கிய கட்சி தேசிய தலைவர் டான்ஸ்ரீ நல்லா கே.எஸ். தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ‘இளைஞர்களே நாளைய மலேசியாவின் தூண்கள்’, என்று நன்கு உணர்ந்த பிரதமர், உயர்கல்வி வளர்ச்சிக்காக கடந்த காலங்களை காட்டிலும் கூடுதலான இடஒதுக்கீடு செய்து உள்ளார். இதனால் சிறப்பான தேர்ச்சி நிலைகளை பெறும் இந்திய மாணவர்களுக்கு, அவர்களின் துறை சார்ந்த அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் வாய்ப்பு கிடைக்கும்.

    மலேசிய இந்தியர்களின் ஆண்டாண்டு கால தலைவிதியாக புலம்பி வரும் குடியுரிமை பிரச்சினைக்கும் கட்டம் கட்டமாக தீர்வு கிடைக்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளது மற்றொரு தித்திப்பான செய்தி ஆகும்.

    கடந்த 1957-ம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்து குடியுரிமை கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் மலேசியர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் பிரதமர் அறிவித்த இத்திட்டத்தை தேசிய முன்னணியுடன் இணைந்து நாடெங்கிலும் சேவையாற்ற மலேசிய இந்திய ஐக்கிய கட்சி தயாராக உள்ளது.

    பிரதமர் அறிவித்த ‘இந்திய சமூகத்திற்கான பெருந்திட்டம்’, அவர் குறிப்பிட்டது போலவே வெறும் திட்டவரைவாக மட்டும் இல்லாமல் செயல்முறை காணும் வகையிலும் இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது. பிரதமர் அறிவித்த திட்டங்களால் இந்தியர்களின் கஷ்டங்கள் இனி சூரியனை கண்ட பனி போல மறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×