search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டம்: நேற்று ஒரே நாளில் 11 பேர் பலி
    X

    வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டம்: நேற்று ஒரே நாளில் 11 பேர் பலி

    வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    கராகஸ்:

    பெட்ரோல் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் வெனிசுலாவில், அந்நாட்டு அதிபரை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்துள்ளது. எண்ணெய் வலிமை மிக்க நாடாக இருந்தாலும் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்துள்ளதால் வெனிசுலாவில் பணவீக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    இதையடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, அதிபருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களில் பல தலைவர்களை அதிபர் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளார். அவர்களை விடுவிக்கக் கோரியும், தற்போதைய அதிபரான நிக்கோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் நடந்து வருகின்றன. இதில் நேற்று முன்தினம் மத்திய கராகஸ் மற்றும் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் நேற்று முன்தினம், நாடு முழுவதும் அதிபருக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.



    இந்த போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல்களில் பொதுமக்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறாக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் வெனிசுலாவில் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று ஒரே நாளில் மட்டும் போராட்டக்காரர்கள் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×