search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்பூஷன் யாதவ் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடு கோபமூட்டுகிற வகையில் உள்ளது: பாகிஸ்தான்
    X

    குல்பூஷன் யாதவ் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடு கோபமூட்டுகிற வகையில் உள்ளது: பாகிஸ்தான்

    குல்பூஷன் யாதவ் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடு கோபமூட்டுகிற வகையில் உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஷகாரியா கூறியுள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, அந்நாட்டு ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளது. வெளியுறவுத்துறை மூலமாக குல்பூஷன் யாதவை சந்தித்து பேசுவதற்கம் பாகிஸ்தான் அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. மேலும் அதற்கான ஆதாரங்களின் நகல்களை கேட்டும் பாகிஸ்தான் தர மறுத்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை தூதர் சையது ஹைதர் ஷாவிற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று சம்மன் அளித்துள்ளது. அதில் குல்பூஷண் ஜாதவ் நிரபராதி என்றும், அவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவ்வாறு இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் செயல் பாகிஸ்தானை கோபமூட்டும்படியாக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஷகாரியா தெரிவித்தபோது,

    பாகிஸ்தானை குல்பூஷன் யாதவ் நோட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் உளவு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருப்பதாக அவருக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் காஷ்மீர் பிரச்சனை, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிக்கக் கோறும் இந்தியாவின் செயல் என பல்வேறு வகையில் இந்தியாவின் செயல்கள் பாகிஸ்தானை கோபமூட்டும் வகையில் இருப்பதாக ஷகாரியா கூறினார். 
    Next Story
    ×