search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டுப்படுத்தப்படாத ஈரான் இன்னொரு வடகொரியாவாக மாறியிருக்கும்: அமெரிக்கா
    X

    கட்டுப்படுத்தப்படாத ஈரான் இன்னொரு வடகொரியாவாக மாறியிருக்கும்: அமெரிக்கா

    அணுசக்தி ஒப்பந்தம் மூலம் கட்டுப்படுத்தி இருக்காவிட்டால் ஈரான் இன்னொரு வடகொரியாவாக மாறியிருந்திருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 நாடுகள் ஈரானுடன் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போதே எதிர்த்தார். அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவும் தற்போது டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

    இதனால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் கருத்து வேறுபாடு அதிகரிக்கும் சூழல் உருவாகி வருகிறது. 

    சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி, அமெரிக்காவின் செயல்கள் ஒரு போதும் அமைதியை தராது. அமெரிக்க தாக்குதல்களால் தீவிரவாதமும் உலக நாடுகளுக்கு இடையில் ஸ்திரமற்றத் தன்மையையே உருவாக்கும் என்று கூறினார். 

    இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் மூலம் கட்டுப்படுத்தி இருக்காவிட்டால் ஈரான் இன்னொரு வடகொரியாவாக மாறியிருந்திருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசு செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன், “ஈரான் நாட்டின் அணுசக்தி அச்சுறுத்தல் வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஈரான் நாட்டுடனான அமெரிக்காவின் கொள்கை குறித்து மறுசீராய்வு செய்யப்படும். ஈரான் நாட்டின் அணுசக்தி குறிக்கோள்கள் உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடியவை” என்றார்.
    Next Story
    ×