search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் - இந்திய தூதர் சந்திப்பு ஒத்திவைப்பு
    X

    பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் - இந்திய தூதர் சந்திப்பு ஒத்திவைப்பு

    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரக உதவிகளை வழங்கும்படி பலமுறை இந்தியா கோரிக்கை வைத்தும், அதனை ஏற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது.

    மேலும், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் டெமினா ஜன்ஜூவாவை சந்தித்து பேசினார். அப்போது, குல்பூ‌ஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்த விவகாரத்தில் இந்தியாவின் கவலையை தெரிவித்தார். அவருக்கு தூதரக உதவி அளிக்கவும் அனுமதி கோரினார். மேலும் ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகை நகல் மற்றும் தூக்குதண்டனை தீர்ப்பின் நகலையும் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

    இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செயலாளர் டெமினா ஜன்ஜுவாவை மீண்டும் சந்திக்க இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே நேரம் கேட்டிருந்தார். இந்த சந்திப்பு இன்று மாலையில் நடைபெறும் என்றும், அப்போது ஜாதவ் மரண தண்டனை தொடர்பாக பேசப்படலாம் என்றும் பாகிஸ்தா வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    எனினும், இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×