search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியா நகரங்களை மீட்க ராணுவம் முற்றுகை: 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்
    X

    சிரியா நகரங்களை மீட்க ராணுவம் முற்றுகை: 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

    போராட்டக்காரர்கள் பிடியில் இருக்கும் சிரியா நகரங்களை மீட்க ராணுவம் முற்றுகையிட்டதால் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

    ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடக்கும் போரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

    போராட்டக்காரர்களின் பிடியில் இருந்த அலெப்போ உள்ளிட்ட பல நகரங்களை சிரியா ராணுவம் படிப்படியாக மீட்டது.

    அதன் அருகேயுள்ள ரஷிதின், மேற்கு அலெப்போ உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்ற கடந்த 2 ஆண்டுகளாக முற்றுகையிட்டுள்ளது.

    தற்போது அங்கு போரை தீவிரப்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்கள் வசம் இருக்கும் இப்பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்படுகின்றன. எனவே, அங்கு தங்கியிருக்கும் 70 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    அவர்கள் பஸ்கள் மூலம் தாக்குதல் நடைபெறும் நகரங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சிரியாவில் போராட்டக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளின் பிடியில் 9 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் 37-க்கும் மேற்பட்ட பகுதிகளில் அச்சுறுத்தலுடன் வாழ்ந்து வருகின்றனர்.
    Next Story
    ×