search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே குண்டுவெடிப்பு: வீரர் ஒருவர் படுகாயம்
    X

    ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே குண்டுவெடிப்பு: வீரர் ஒருவர் படுகாயம்

    ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    டார்ட்முண்டு:

    ஜெர்மனியில் உள்ள டார்ட்முண்டு நகரில் பொருசியா டார்ட்முண்டு கால்பந்து வீரர்களின் பேருந்துக்கு அருகே மூன்று முறை குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் கால்பந்தாட்ட வீரர்கள் சென்ற பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாகவும், அந்த அணியின் டிஃபென்டர் மார்க் பர்த்ரா என்பவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் செய்தித் தொடர்பாளர் குன்னார் வொர்ட்மான் தெரிவித்தார்.

    இன்ற நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் மொனாகோவுக்கு எதிராக விளையாடுவதற்காக, விடுதியில் இருந்து, வீரர்களுடன் பேருந்து புறப்பட்ட போது, திடீரென குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பை அடுத்து இன்று நடைபெறவிருந்த கால்பந்து போட்டி நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ப்ரீமியர் கிளப் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து கால்பந்து மைதானத்தின் செய்தித் தொடர்பாளர் நார்பர்ட் டிக்கெல் கூறும்போது, இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்படுகிறது. மைதானம் குறித்து ரசிகர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. மேலும் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×