search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப் ஒன்றும் தெரியாத முட்டாள்: ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் விமர்சனம்
    X

    டொனால்டு டிரம்ப் ஒன்றும் தெரியாத முட்டாள்: ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் விமர்சனம்

    டொனால்டு டிரம்ப் ஒன்றும் தெரியாத முட்டாள் எனவும் ஐ.எஸ். இயக்கம் பற்றியோ, இஸ்லாம் பற்றியோ அவருக்கு எதுவுமே தெரியாது எனவும் ஐ.எஸ். தீவிரவாதிகள் விமர்சித்து உள்ளார்.
    வாஷிங்டன்:

    ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

    எனவே, அவருக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் தீவிரமாக செயல்பட தொடங்கி உள்ளனர்.

    2 நாட்களுக்கு முன்பு டொனால்டு டிரம்பை கொல்லப்போவதாக அவரது பெயரை சேர்த்து வெளியிட்டு இருந்தனர். இப்போது டொனால்டு டிரம்பை விமர்சித்து ஆடியோ உரை ஒன்றை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

    அதில் ஐ.எஸ். இயக்கத்தில் செய்தி தொடர்பாளர் அபுஹசன் அல் முகாதீர் பேசி இருக்கிறார். 37 நிமிடம் ஓடும் இந்த ஆடியோவில் அமெரிக்கர்களை பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் டொனால்டு டிரம்பை மிகவும் மோசமாக விமர்சித்து உள்ளார்.

    அதில், அமெரிக்கர்களே நீங்கள் திவாலாக போகிறீர்கள். உங்களை சாவு எதிர்நோக்கி காத்து இருக்கிறது. இதற்கு தயார் ஆகுங்கள்.

    தற்போது உங்களை ஒன்றும் தெரியாத முட்டாள் (டொனால்டு டிரம்ப்) ஆண்டு கொண்டு இருக்கிறார். அவரால் நீங்கள் நாசம் அடைய போகிறீர்கள். டெனால்டு டிரம்புக்கு ஈராக் பற்றியோ, ஐ.எஸ். இயக்கம் பற்றியோ, இஸ்லாம் பற்றியோ எதுவுமே தெரியாது. அவருக்கு போதிய அறிவு இல்லை என்று பேசி உள்ளார்.

    Next Story
    ×