search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
    X

    உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

    தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியா அத்துமீறி தலையிடுவதாக பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் பலூச் மாகாணத்தில் குல்புஷான் யாதவ் என்பவர் இம்மாதம் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட குல்புஷான் யாதவ் இந்திய உளவு அமைப்பான ‘ரா’வுக்கு உளவு வேலை பார்த்ததாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சனைகளில் இந்தியா தலையிடுவது உலக நாடுகள் அறிந்த ஒன்றே. இங்கு நடக்கும் பொருளாதார தீவிரவாதத்திற்கு இந்தியாதான் காரணமாக உள்ளது. பலூச் மாகாணத்தில் உளவாளிகளை வைத்து அமைதியின்மையை ஏற்படுத்த ‘ரா’ முயற்சிக்கிறது” எனத் தெரிவித்தார்.

    மேலும், காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி, இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையான காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபீஸ் ஜகாரியா மூக்கை நுழைத்துள்ளார்.
    Next Story
    ×