search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்ப்பால் ஏற்றுமதிக்கு கம்போடியா தடை
    X

    தாய்ப்பால் ஏற்றுமதிக்கு கம்போடியா தடை

    ஏழை நாடான கம்போடியாவில் ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் அவதிப்பட்டு வருவதால் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு கம்போடியாவில் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து தாய்ப்பால் ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.
    நாம்பென்:

    ஆப்பிரிக்காவில் உள்ள கம்போடியாவில் தாய்ப்பால் சேகரித்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் தாய்ப்பாலை இறக்குமதி செய்து அதை பயன்படுத்தி விற்பனை செய்து வந்தது.

    அமெரிக்காவில் 150 மில்லி லிட்டர் தாய்ப்பால் 20 டாலர் (ரூ.1300) என விற்பனை செய்யப்பட்டது.

    இதற்கிடையே, தாய்ப்பால் ஏற்றுமதிக்கு கம்போடியாவில் எதிர்ப்பு கிளம்பியது. ஏழை நாடான கம்போடியாவில் ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இங்கு தாய்ப்பால் ஏற்றுமதி செய்வது கம்போடியா குழந்தைகளை வஞ்சிப்பது போலாகும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து தாய்ப்பால் ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.


    இதற்கு பெண்ணுரிமை மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சில அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் தாய்ப்பால் விற்பனை மூலம் வருமானம் ஈட்டி வந்த பல தாய்மார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×