search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டனில் இருந்து விலகல்: ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த பாராளுமன்றம் அனுமதி
    X

    பிரிட்டனில் இருந்து விலகல்: ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த பாராளுமன்றம் அனுமதி

    பிரிட்டனில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    பிரிட்டனின் ஓர் அங்கமாக உள்ள ஸ்காட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. இதுதொடர்பாக 2014-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், ஸ்காட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து 55 சதவீத மக்கள் வாக்களித்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

    இதனையடுத்து, பிரிட்டனில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக செயல்படும் வகையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஸ்காட்லாந்து அரசு மீண்டும் முடிவு செய்தது. இதற்காக பாராளுமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டது.

    இந்நிலையில், பிரிட்டனில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    பிரிட்டன் பாராளுமன்றத்துடன் பேச்சுவார்த்தையை பிரதமர் நிகோலா ஸ்டர்ஜியன் தொடங்குவதற்காக தீர்மானத்திற்கு அந்நாட்டு எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்காக நடவடிக்கையை பிரிட்டன் மேற்கொண்டு வரும் நிலையில், பிரிட்டனில் இருந்து பிரிய ஸ்காட்லாந்து முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×