search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினியின் இலங்கை பயணம் ரத்து : முன்னாள் அதிபரின் மகன்  நமல் ராஜபக்சே கருத்து
    X

    ரஜினியின் இலங்கை பயணம் ரத்து : முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே கருத்து

    இலங்கை செல்ல இருந்த ரஜினிகாந்த் தனது பயணத்தை ரத்து செய்துள்ள நிலையில், தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
    கொழும்பு:

    இலங்கையில் உள்ள வவுனியாவில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார்.

    ரஜினி இலங்கை செல்வதற்கு தமிழகத்தில் உள்ள சில தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே எதிர்ப்பு காணப்பட்டது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தற்போது உள்ள சூழ்நிலையில் ரஜினி இலங்கை செல்வது சரியல்ல எனத் தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து, ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். உடனே, தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளதாக லைகா நிறுவனம் கூறியது. இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டிவிட்டரில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ”தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசியல் கட்சியினர் யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். நடிகர் ரஜினியாக இருந்தாலும் உதவ அனுமதிக்கமாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×