search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தேசிய தினத்தில் சீன ராணுவம் அணிவகுப்பு
    X

    பாகிஸ்தான் தேசிய தினத்தில் சீன ராணுவம் அணிவகுப்பு

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தில் சீனா மற்றும் சவுதி படைகளின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது.
    இஸ்லாமாபாத்:

    முஸ்லிம்களுக்கு தனி நாடு கேட்டு 1940-ம் ஆண்டு லாகூரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 23-ந்தேதி தேசிய தினமாக பாகிஸ்தான் கொண்டாடுகிறது. அவ்வகையில் பாகிஸ்தானில் நேற்று தேசிய தினம் கொண்டாடப்பட்டது.

    தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய தின ராணுவ அணிவகுப்பில், முதல் முறையாக சீன ராணுவம் அதாவது சீனாவின் மக்கள் விடுதலைப் படை கலந்துகொண்டது. இதேபோல் சவுதி மற்றும் துருக்கி படைகளும் இந்த அணிவகுப்பில் இணைந்தது. இந்த அணி வகுப்பில் பாகிஸ்தான் ராணுவம் தனது ஆயுதங்களை காட்சிப்படுத்தியது.

    விழாவில் ஜனாதிபதி மம்னூன் உசேன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தேசிய தின பேரணியில் பங்கேற்ற சீனா 90 ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளதற்கு நன்றி கூறினார்.
    Next Story
    ×