search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் முக்கிய மாவட்டத்தை தீவிரவாதிகள் கைப்பற்றினர்
    X

    ஆப்கானிஸ்தானில் முக்கிய மாவட்டத்தை தீவிரவாதிகள் கைப்பற்றினர்

    ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுடன் கடும் சண்டையிட்டு வரும் தீவிரவாதிகள் முக்கிமான மாவட்டத்தை கைப்பற்றி உள்ளனர்.
    காபூல்:

    தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகள் மீட்டனர். தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி அமைக்கப்பட்டு மக்களாட்சி நடக்கிறது. தற்போது நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் தலிபான் தீவரவாதிகள் கை ஓங்கியுள்ளது.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் ராணுவத்துக்கும், தலிபான்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதில் வெற்றி பெற்ற தீவிரவாதிகள் தென் ஹெல்மண்டில் உள்ள முக்கியமான மாவட்டமான சங்கின் மாவட்டத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

    இந்த மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், இதனை பயன்படுத்தி தீவிரவாதிகள் அதிகாலையில் ஊடுருவி கைப்பற்றிவிட்டதாகவும் மாவட்ட காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். 8 போலீஸ் அதிகாரிகளும், 30 ஆப்கானிஸ்தான் படை வீரர்களும் மட்டுமே மாவட்ட தலைநகரில் பாதுகாப்பு பணியில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

    இழந்த மாவட்டத்தை ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக மீட்க வேண்டும் என்று சங்கின் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. முகமது ஹாசிம் அலோக்சாய் வலியுறுத்தி உள்ளார்.

    தற்போது தீவிரவாதிகள் கைப்பற்றிய மாவட்டம்தான், பிரிட்டன் படைகளுக்கு மிகவும் சவாலான போர்க்களமாக இருந்தது. தீவிரவாதிகளுடன் இதற்கு முன்பு நடந்த சண்டையில் பிரிட்டனைச் சேர்ந்த 104 வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×