search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி காலித் மசூத்.
    X
    போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி காலித் மசூத்.

    இங்கிலாந்து பாராளுமன்றம் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி முன்னாள் ஆசிரியர்: பரபரப்பு தகவல்

    இங்கிலாந்து பாராளுமன்றம் அருகே நடைபெற்ற தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி, இதற்கு முன்பு ஆசிரியராக பணிபுரிந்துள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடம் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பாலம் அருகே உள்ளது. நேற்று முன்தினம் ஒரு தீவிரவாதி காரை வேகமாக ஓட்டி வந்து மக்கள் மீது மோதினான்.

    அதன் பின்னர் பாராளுமன்ற நுழைவு வாயிலை நோக்கி கத்தியுடன் ஓடிவந்து போலீசாரை குத்தினான். அவனை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் சுட்டுக் கொன்றனர்.

    இத்தாக்குதலில் 4 பேர் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 29 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இது தவிர வேறு தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் பாராளுமன்றம் முன்பு மக்கள் கூட்டத்துக்குள் காரை ஏற்றி தாக்குதல் நடத்தியவன் காலித் மசூத் (52) என அடையாளம் தெரிந்துள்ளது.

    இங்கிலாந்தை சேர்ந்தவன். முன்னாள் குற்றவாளியான இவன் இதற்கு முன்பு ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறான். பணியில் இருந்து விலகி சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தான். அதற்காக ஜெயில் தண்டனை பெற்று இருக்கிறான்.

    இங்கிலாந்து உளவுத்துறையான எம்.15 அமைப்பு நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகி உள்ளன என பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

    தாக்குதல் நடத்த காலித் மசூத் வாடகைக்கு கார் எடுத்து இருக்கிறான். அது எண்டர்பிரைசஸ் என்ற கம்பெனிக்கு சொந்தமானது.

    பிர்மிங்காமில் ஸ்பிரிங் ஹில் கிளையில் இக்காரை அவன் வாடகைக்கு எடுத்து வந்து தாக்குதல் நடத்தியிருக்கிறான். அதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

    தீவிரவாதி காலித் மசூத் தென் கிழக்கு இங்கிலாந்தில் கென்ட் நகரில் பிறந்தான். தற்போது அவன் மத்திய இங்கிலாந்தில் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் வசித்து வந்தான்.
    Next Story
    ×