search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானத்தில் லேப்டாப்க்கு தடையா?: ஐக்கிய அரபு எமிரேட் அதிர்ச்சி
    X

    விமானத்தில் லேப்டாப்க்கு தடையா?: ஐக்கிய அரபு எமிரேட் அதிர்ச்சி

    எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமராக்களை விமானத்தில் கொண்டு வர அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக ஐக்கிய அரபு எமிரேட் தெரிவித்துள்ளது.
    அபுதாபி:

    எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு
    தடை விதித்துள்ளது. மொபைல்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    வளைகுடா நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவைத், மொராக்கோ, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து மேற்சொன்ன பொருட்களை எடுத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு துருக்கி அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கூறியது.

    இதனை தொடர்ந்து, அமெரிக்கா அரசு அறிவித்த இதே திட்டத்தை பிரிட்டன் அரசும் அமல்படுத்தியது. துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா, சவூதி அரேபியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டனுக்கு வரும் போது விமானங்களில் லேப்டாப், டேப்லட், ஐ-பேடு போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர பிரிட்டன் தடை விதித்தது.



    எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமராக்களை விமானத்தில் கொண்டு வர அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது
    அதிர்ச்சி அளிப்பதாக ஐக்கிய அரபு எமிரேட் தெரிவித்துள்ளது.

     பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்கனவே அதிக கடுமையை பின்வற்றி
    வருவதாக கூறியுள்ள ஐக்கிய அரபு எமிரேட், இருப்பினும் அமெரிக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.
    Next Story
    ×