search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசம்: சிமெண்ட் லாரி கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி
    X

    வங்காளதேசம்: சிமெண்ட் லாரி கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி

    வங்காளதேசம் நாட்டின் மைமென் சிங் மாவட்டத்தில் இன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உள்பட பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டில் பயணிகளுக்கான போக்குவரத்து வசதி வெகு குறைவாக இருப்பதாலும் சரக்கு லாரிகளில் செல்லும் செலவு பேருந்துகளில் செல்லும் கட்டணத்துக்கு குறைவானதாக உள்ளதாலும் இங்கு வாழும் ஏழை, எளிய மக்கள் லாரிகளில் ஏறிச் செல்வதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

    அவ்வகையில், மைமென் சிங் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 15 பேர் இன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியில் அமர்ந்து மெஹெர்பாரி என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையை நான்குவழிப் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, குண்டும் குழியுமாக இருந்தது.


    அந்த பள்ளம் மேட்டில் மெதுவாக சென்ற லாரி ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. லாரியின் மீது அமர்ந்திருந்தவர்கள் கீழே விழ, அவர்கள் மீது அடுக்கடுக்காக சிமெண்ட் மூட்டைகள் சரிந்து விழுந்தன.

    இந்த கோர விபத்தில் நான்கு குழந்தைகள் உள்பட பத்து பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×