search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது
    X

    லண்டன் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது

    பிரிட்டனில் பாராளுமன்ற வளாகம் அருகில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் லண்டன் போலீசார் 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
    லண்டன்:

    இங்கிலாந்து பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, பாராளுமன்ற வளாகம் அருகே உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில், ஒரு கார் அதிவேகத்தில் வந்து பொதுமக்கள் மீது மோதியது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கீழே விழுந்தனர். ஒரு பெண் பலியானார். பீதியில், பொதுமக்கள் சுமார் 50 பேர், பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி ஓடினர்.

    அதே சமயத்தில், நடுத்தர வயதுடைய ஒருவன், கையில் 7 அங்குல நீள கத்தியை வைத்துக்கொண்டு, பாராளுமன்ற முக்கிய நுழைவாயில் நோக்கி ஓடி வந்தான். அவனை ஒரு போலீஸ் அதிகாரி தடுக்க முயன்றார்.  தீவிரவாதி போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்தினான். இதில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    பின்னர் பாராளுமன்றத்தில் நுழைவதற்காக தீவிரவாதி ஓடினான். இதற்குள் உஷாரடைந்த போலீசார் அவனை நோக்கி சரமாரி சுட்டனர். இதில் தீவிரவாதி உயிரிழந்தான்.

    பாலத்தில் தீவிரவாதி கார் மோதியதில் 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 41 பேர் படுகாயமடைந்திருந்தனர். அவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். 40 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



    இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேரும் தீவிரவாதியும் இறந்துள்ளனர். இதன்படி பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், பிரிட்டனில் பாராளுமன்ற வளாகம் அருகில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் லண்டன் போலீசார் 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இது குறித்து பிரிட்டன் தீவிரவாத எதிர்ப்பு அதிகாரி ரௌலே கூறுகையில், “லண்டன் நகரில் 6 இடங்களில் சோதனை நடத்தினோம். அதில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்” என்றார்.

    Next Story
    ×