search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் மறுசுழற்சி மட்டுமே இறுதித் தீர்வு - ஐ.நா. ‘தண்ணீர் தின’ அறிக்கை
    X

    தண்ணீர் மறுசுழற்சி மட்டுமே இறுதித் தீர்வு - ஐ.நா. ‘தண்ணீர் தின’ அறிக்கை

    ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை, மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தினால் மட்டுமே உலகளவில் தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபை அறிக்கையளித்துள்ளது.
    நியூயார்க்:

    உலக தண்ணீர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளன. அந்த அறிக்கையை யுனெஸ்கோவின் டைரக்டர் நேற்று பாரிசில் வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை உலகளவில் மக்கள் மீண்டும் பயன்படுத்துவதில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினைத் தீர்க்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்

    உலகில் மூன்றில் 2 பங்கு மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதமாவது தண்ணீர் பிரச்சினை உள்ள இடங்களில் வசிக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சீனா மற்றும் இந்தியாவில் வசிக்கின்றனர். சுத்தமான தண்ணீரையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மறுசுழற்சி மேலாண்மை வாய்ப்பு இருந்தும் அதை மக்கள் அலட்சியப்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலகளவில் தண்ணீர் பற்றாக்குறைதான் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கப் போகிறது என்று கடந்த ஆண்டு உலக பொருளாதார அமைப்பின் ஆண்டறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×