search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை திறப்பு
    X

    ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை திறப்பு

    தீவிரவாத தாக்குதல் காரணமாக சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
    இஸ்லாமாபாத்:

    தீவிரவாத தாக்குதல் காரணமாக சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து வரும் தீவிரவாதிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு நாடுகளின் எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டன.

    இந்த நிலையில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்  எல்லைப் பகுதிகளைத் திறக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று இரு நாட்டு எல்லைகளும் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் முடங்கியிருந்த சரக்குப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. பாகிஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் எல்லையைக் கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன.

    தெற்கு ஆசியாவில் பரபரப்பாக வர்த்தகம் நடைபெறும் பகுதியான இருநாடுகளின் எல்லைகள் திறக்கப்பட்டது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×