search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன அடிப்படைவாதிகள் தான் என்னை தொல்லையாக கருதுகிறார்கள், சீன பொதுமக்கள் அல்ல: தலாய் லாமா
    X

    சீன அடிப்படைவாதிகள் தான் என்னை தொல்லையாக கருதுகிறார்கள், சீன பொதுமக்கள் அல்ல: தலாய் லாமா

    சீன அடிப்படைவாதிகள் தான் என்னை தொல்லையாக கருதுகின்றனர், ஆனால் சீன பொது மக்கள் நல்ல எண்ணத்துடன் பார்க்கிறார்கள் என திபெத் புத்த மத துறவி தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    திபெத் புத்தமத துறவி தலாய் லாமா இந்தியாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுதெல்லாம், சீனா அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில், பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற புத்த மாநாட்டில், தலாய் லாமா கலந்து கொண்ட விவகாரம் இந்தியா, சீனா இடையே மீண்டும் உரசலை ஏற்படுத்தியுள்ளது.

    மார்ச் 17-ம் தேதி ஆரம்பித்த இந்த மாநாட்டை தலாய் லாமா மற்றும் இந்திய கலாச்சார துறை மந்திரி மகேஷ் ஷர்மா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, “சீனாவுக்கு எதிராகச் செயல்படும் தலாய் லாமாவுக்கு இந்தியா இப்படி இடம் கொடுப்பது சரியில்லை. சீன - இந்திய உறவில் நல்லிணக்கம் தொடரும் வகையில் இந்தியா செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தது.

    இந்நிலையில் சீனாவின் எதிர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலாய் லாமா, 'சீனாவின் தீவிர ஆதரவாளர்கள் தான் என்னை தொல்லை கொடுப்பவராக பார்க்கின்றனர். சீனாவில் இருக்கும் பொதுமக்கள் என்னை நேர்மறை கண்ணோட்டத்தில்தான் பார்க்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

    இதனிடையே சீனாவின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், “தலாய் லாமாவை ஒரு மத தலைவராக தான் நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஒரு அரசியல் தலைவராக அல்ல. அதனால் சீனாவின் கருத்து பொருத்தமற்றது” என்று தெரிவித்தார்.
    Next Story
    ×