search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சலாலா- கோழிக்கோடு இடையே தினசரி விமான சேவையைத் துவக்க ஓமன் ஏர் நிறுவனம் முடிவு
    X

    சலாலா- கோழிக்கோடு இடையே தினசரி விமான சேவையைத் துவக்க ஓமன் ஏர் நிறுவனம் முடிவு

    ஓமன் நாட்டிலுள்ள சலாலா மற்றும் கேரளாவின் கோழிக்கோடு நகரங்களுக்கிடையே தினசரி விமான சேவையைத் துவக்க, ஓமன் ஏர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
    துபாய்:

    ஓமன் ஏர் நிறுவனம் ஓமனின் தெற்கு பகுதியை சேர்ந்த சலாலா நகரத்திலிருந்து கேரளாவின் கோழிக்கோடு வரை, தினசரி விமான சேவையைத் துவக்க முடிவு செய்துள்ளது.



    மார்ச் 27-ம் தேதி இந்த தினசரி விமான சேவை துவங்கவிருக்கிறது. ஓமன் உள்ளூர் நேரப்படி சலாலாவில் 1.10 மணிக்கு புறப்படும் போயிங் 737-800 ரக விமானம் இந்திய நேரப்படி காலை 6.20 மணியளவில் கோழிக்கோட்டை வந்தடையும். அதே போல கோழிக்கோட்டிலிருந்து மீண்டும் காலை 7 மணிக்கு புறப்படும் விமானம், சலாலா விமான நிலையத்தை 9.15 மணிக்கு சென்றடையும்.

    சலாலா-கோழிக்கோடு நகரங்களுக்கிடையேயான மொத்த பயண நேரம் மூன்றரை மணி நேரம். மஸ்கட்-கோழிக்கோடு நகரங்களுக்கிடையே தினசரி சேவையை ஓமன் ஏர் நிறுவனம் ஏற்கனவே வழங்கி வருகிறது.
    Next Story
    ×