search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழ்க்கை வரலாறு பற்றி டிரம்ப் முதல் மனைவி எழுதிய புத்தகம்
    X

    வாழ்க்கை வரலாறு பற்றி டிரம்ப் முதல் மனைவி எழுதிய புத்தகம்

    அமெரிக்க அதிபர் டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்புடன் தான் வாழ்ந்த வாழ்க்கை குறித்தும், தனது குழந்தைகள் குறித்தும் வாழ்வில் அவர்கள் உயர்ந்த நிலைக்கு வந்தது குறித்தும் புத்தகம் எழுதியுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் மிகப் பெரிய கோடீசுவரர். ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்து வந்தார். இவருக்கு 3 மனைவிகள்.

    முதல் மனைவி பெயர் இவானா. தற்போது இவருக்கு 63 வயது ஆகிறது. இவர் ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்டு நாடாக இருந்த செக்கோஸ் லாவாகியா நாட்டை சேர்ந்தவர்.

    மாடல் அழகி ஆக இருந்த அவர் வர்த்தகத்திலும் கொடி கட்டி பறந்தார். கடந்த 1979-ம் ஆண்டு டொனால்டு டிரம்பை மணந்தார். இவர்களுக்கு டொனால்டு ஜுனியர், இவாங்கா மற்றும் எரிக் என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு ஏற்படவே 1992-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு டிரம்ப் மரியா மாப்பில்ஸ் என்ற நடிகையை காதலித்து 2-வது திருமணம் செய்தார்.

    இவர்களது மண வாழ்வும் நிலைக்கவில்லை. 6 ஆண்டுகளுக்கு பிறகு இவரையும் டிரம்ப் விவாகரத்து செய்தார். அதன் பிறகே மெலானியா என்ற மாடல் அழகியை காதலித்து 3-வதாக திருமணம் செய்தார்.

    தற்போது அவர் டிரம்பின் மனைவியாகவும், அமெரிக்காவின் முதல் பெண்மணியாகவும் இருக்கிறார். இவர் ஸ்லோவேனியாவை சேர்ந்தவர்.



    இந்த நிலையில் டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்புடன் தான் வாழ்ந்த வாழ்க்கை குறித்தும், தனது குழந்தைகள் குறித்தும் வாழ்வில் அவர்கள் உயர்ந்த நிலைக்கு வந்தது குறித்தும் புத்தகம் எழுதியுள்ளார்.

    அப்புத்தகத்தை ‘கேலரி புக்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. வருகிற செப்டம்பர் 12-ந் தேதி புத்தகத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×