search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டனுடன் வணிக உறவு குறித்து பேச வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்
    X

    பிரிட்டனுடன் வணிக உறவு குறித்து பேச வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியுள்ளதை அடுத்து பொருளாதார பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால், பிரிட்டனுடன் வணிக உறவு குறித்து பேச வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கடந்தாண்டு பிரிட்டன் தனியாக பிரிந்தது. இந்த பிரிவால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிகட்ட புதிய பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது. பிரெக்ஸிட் மசோதா தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.



    அதில், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறினாலும், பிரிட்டனில் வசித்து வரும் பிற 27 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும், மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளிலும் சில திருத்தங்களை உறுப்பினர்கள் கோரினர். இத்திருத்தங்கள் குறித்த விவாதங்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து நடக்கிறது.

    இந்நிலையில், பிரிட்டன் பிரிவால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிகட்டவும், முன்னர் உள்ள பல வணிக ஒப்பந்தங்களை மறுசீரமைப்பது குறித்து பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.
    Next Story
    ×