search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா: ஈரான் நாட்டுக்கு மட்டும் விலக்கு அளித்து புதிய குடியேற்ற மசோதா
    X

    அமெரிக்கா: ஈரான் நாட்டுக்கு மட்டும் விலக்கு அளித்து புதிய குடியேற்ற மசோதா

    அமெரிக்காவுக்குள் நுழைய 6 முஸ்லிம் நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்ப்ட்டிருந்த நிலையில், ஈரான் நாட்டிற்கு விலக்கு அளித்து புதிய குடியேற்ற மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக உள்நாட்டுப்போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்தார். மேலும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டார். அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள், டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளன.

    குடியேற்றம் தொடர்பாக அந்த உத்தரவு சர்ச்சையைக் கிளப்பியது மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் அதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, சிக்கல்கள் இல்லாத புதிய குடியேற்றக் கொள்கையை விரைவில் வெளியிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஈரான் நாட்டுக்கு விலக்கு அளித்து புதிய குடியேற்றக் கொள்கை மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்த்திட்டுள்ளார்.
    Next Story
    ×