search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரனுக்கு சுற்றுலாப்பயணம் - 2 பேரை அமெரிக்க நிறுவனம் அனுப்புகிறது
    X

    சந்திரனுக்கு சுற்றுலாப்பயணம் - 2 பேரை அமெரிக்க நிறுவனம் அனுப்புகிறது

    அடுத்த ஆண்டு சந்திரனை சுற்றியுள்ள பகுதிக்கு 2 பேரை சுற்றுலாவாக அனுப்பி வைக்க அமெரிக்க நாட்டில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் கூறியுள்ளது
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், விண்வெளி போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனம் ஆகும்.

    இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு சந்திரனை சுற்றியுள்ள பகுதிக்கு 2 பேரை சுற்றுலாவாக அனுப்பி வைக்கிறது. இந்த தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் முஸ்க் தெரிவித்துள்ளார்.

    பெயர் குறிப்பிடப்படாத அந்த 2 பேர், இந்த விண்வெளிப்பயணத்துக்கு பெரும் தொகையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் டெபாசிட் செய்து உள்ளனர்.

    இதுபற்றி எலோன் முஸ்க் கூறும்போது, “அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவின் ஒத்துழைப்பால்தான் இந்த திட்டம் சாத்தியம் ஆகிறது. இதற்கு முன்பு யாரும் சென்றிராத வகையில் இந்த 2 பேரும், அதிவேகமாக சூரிய மண்டலத்துக்குள் செல்வார்கள்” என குறிப்பிட்டார்.

    அதே நேரத்தில் விண்வெளி சுற்றுலா செல்லக்கூடிய 2 பேரின் பெயர் விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார். இருப்பினும், “அவர்கள் இருவரும் ஒருவரை மற்றவர் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் ஹாலிவுட்டை சேர்ந்தவர்கள் அல்ல” என்று அவர் கூறினார். 
    Next Story
    ×