search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை வழக்கு - கைது செய்யப்பட பெண்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
    X

    வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை வழக்கு - கைது செய்யப்பட பெண்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜாங்-நம் ரசாயன விஷம் மூலம் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
    கோலாலம்பூர்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம். இவர் கடந்த 13-ந்தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் திடீரென மரணம் அடைந்தார். விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன வி‌ஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    இக்கொலை தொடர்பாக இந்தோனேசியா மற்றும் வியட்நாமை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரின் மீதும் கொலைக் குற்றம் சாட்டி குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அதுவிரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.



    கிம் ஜாங்-நம்மை கொலையில் வட கொரியாவைச் சேர்ந்த குழுதான் ஈடுபட்டிருக்கும் எனவும் 8 வட கொரியர்கள் மீது மலேசிய போலீஸ் சந்தேகம் அடைந்துள்ளதாகவும் வட கொரிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×