search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்கர் படவிழாவில் பங்கேற்க சிரியா நாட்டு இயக்குனருக்கு அமெரிக்க அரசு தடை
    X

    ஆஸ்கர் படவிழாவில் பங்கேற்க சிரியா நாட்டு இயக்குனருக்கு அமெரிக்க அரசு தடை

    அமெரிக்காவில் நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிரியா நாட்டை சேர்ந்த பிரபல சினிமா டைரக்டர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அங்காரா:

    சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    போரின் அவலத்தையும், பாதிக்கப்படும் பொது மக்களை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் காப்பாற்றும் சம்பவங்களையும் இங்கிலாந்தை சேர்ந்த காலெட் காதிப் (21) என்ற டைரக்டர் இயக்கியுள்ளார்.



    இது ஒரு ஆவணப்படமாகும். 40 நிமிட நேரம் ஓடக்கூடியது. இப்படம் அமெரிக்காவில் நடைபெறும் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    ஆஸ்கர் விருது வழங்கும் விழா நாளை (27-ந்தேதி) லாஸ்ஏஞ்சல்சில் நடக்கிறது. அதில் பங்கேற்க அவர் விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    வழியில் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களில் பிரச்சினை இருப்பதாக கூறப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இப்பிரச்சினை அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து டைரக்டர் காலெட் காதிப் கூறும்போது, “டிரம்பின் விசா தடையால் தான் பாதிக்கப்பட்டதாக கருதவில்லை” என்றார்.
    Next Story
    ×