search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவருக்கு பதிலாக பாலங்களை கட்டுங்கள்: பெரு அதிபர் அறிவுரை
    X

    மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவருக்கு பதிலாக பாலங்களை கட்டுங்கள்: பெரு அதிபர் அறிவுரை

    அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவருக்கு பதிலாக பாலங்களை கட்டுங்கள் என வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்த பெரு நாட்டு அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
    வாஷிங்டன்:

    மெக்சிகோ - அமெரிக்கா இடையே தடுப்பு சுவர் கட்டும் டொனால்ட் டிரம்ப்பின் திட்டத்தை அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோதே பெரு நாட்டின் அதிபரான பெட்ரோ பாப்லோ குக்சின்ஸ்கி முன்னர் ஆதரித்து வந்தார்.

    ஒரு பேட்டியின்போது விளையாட்டாக, ஒருவேளை டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்று, தனது தடுப்பு சுவர் திட்டத்தை செயல்படுத்த விரும்பினால் அந்நாட்டுடனான எங்களது உறவுகளை துண்டித்துக் கொள்ளவும் தயார் என்றும் முன்னர் பெரு அதிபர் தெரிவித்திருந்தார்.


    தேர்தலில் வென்று அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ - அமெரிக்கா இடையே தடுப்பு சுவரை எழுப்பியே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். வட அமெரிக்க கண்டத்தில் உள்ள முக்கிய நாடான பெரு நாட்டுடன் நல்லுறவை பேணவே நாங்கள் விரும்புகிறோம் என டிரம்ப் கூறி வருகிறார்.

    இந்நிலையில், அரசுமுறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்ற பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ குக்சின்ஸ்கி வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். பின்னர், அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், ‘மக்கள் சுதந்திரமாக நடமாட நாம் அனுமதிக்க வேண்டும். எனவே, மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவருக்கு பதிலாக பாலங்களை கட்டுங்கள் என டிரம்ப்பை நான் கேட்டுக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×