search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை: விழிப்புடன் இருக்குமாறு சீக்கிய உரிமைகள் அமைப்பு எச்சரிக்கை
    X

    அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை: விழிப்புடன் இருக்குமாறு சீக்கிய உரிமைகள் அமைப்பு எச்சரிக்கை

    அமெரிக்காவின் கென்சாஸ் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க வாழ் சீக்கியர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு சீக்கிய உரிமைகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கென்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்பவர் நேற்று அதே பகுதியில் உள்ள மதுபான விடுதியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த ஆடம் புரின்டன் என்ற முன்னாள் கடற்படை வீரரால் இனவெறியுடன் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த துப்பாக்கி சூட்டை தடுக்க முயன்ற ஸ்ரீனிவாஸின் உடன் பணியாற்றும் இயன் கிரில்லாட் என்பவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட ஆடம் புரின்டனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கென்சாஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க வாழ் சீக்கியர்களுக்கான உரிமைகள் அமைப்பு, இந்த சம்பவத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.



    மேலும், அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் வெளியில் செல்லும் போது கவனமாகவும், கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Next Story
    ×