search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்மங்கள் நிறைந்த சாகோன் நாகரீகம்: கம்பீரமாக ஆட்சி புரிந்த அக்காலத்து பெண்கள்
    X

    மர்மங்கள் நிறைந்த சாகோன் நாகரீகம்: கம்பீரமாக ஆட்சி புரிந்த அக்காலத்து பெண்கள்

    ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பின் படி சாகோன் எனும் மர்மம் நிறைந்த நாகரீகத்தை பெண்களே ஆட்சி செய்ததாகவும், அவர்கள் தங்களது சக்திகளை தங்களின் மகள்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
    வாஷிங்டன்:

    பூமி பிரபஞ்சத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாகோன்கள் இன்றைய நியூ மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர். மர்மம் நிறைந்த நாகரீகத்தினராக பார்க்கப்படும் சாகோன்கள் 100க்கும் அதிகமான அறைகள் கொண்ட லாவிஷ் கற்களால் ஆன வீடுகளில் வசித்து வந்துள்ளனர். 

    வரலாற்றில் இருந்து கி.பி 1140களில் மறைந்து போன இந்த பண்டைய நாகரீகம் பல்வேறு பெரிய கற்களால் ஆன வீடுகளை மட்டும் விட்டுச் சென்றுள்ளது. இவற்றில் 100க்கும் அதிகமான அறைகள் இருப்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

    சாகோன் நாகரீகத்தின் மிகப்பெரிய வீடு நியூ மெக்சிகோவின் சாகோ காண்யோன் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பியூப்லோ பாணிட்டோ என அழைக்கப்படும் இந்த வீட்டில் மொத்தம் 650 அறைகள் உள்ளன. பியூப்லோ பாணிட்டோ சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சாகோன் நாகரீகத்தை பெண்கள் தான் ஆட்சி செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 



    உயர் பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட கல்லறைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சாகோன்கள் தங்களது சக்திகளை தாய்மரபு மூலம் கி.பி 800-1130 வரை தலைமுறையினரிடையே கடந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் சாகோண்களின் அறை எண் 33-இல் இருந்து உயர் பிரிவினரின் மரபணுக்களை சேகரித்துள்ளனர். 

    அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்கள் பார்க்க ஒரே மாதிரியானதாகவும், ஒரே மரபணு குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கிறது. 40 வயதில் மரணித்த பெண்மனி, அவரின் பேர்  மற்றும் 45 வயது பெண்மனி மற்றும் அவரின் மகளின் சடலங்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் தலையில் காயம் ஏற்படுத்தப்பட்டு 40-வயதில் மரணித்த ஆண் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×