search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் வீட்டு சிறையை எதிர்த்து தீவிரவாதி சயீத் வழக்கு
    X

    பாகிஸ்தானில் வீட்டு சிறையை எதிர்த்து தீவிரவாதி சயீத் வழக்கு

    பாகிஸ்தானில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தீவிரவாதி ஹபீஸ் சயீத் லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    லாகூர்:

    பாகிஸ்தானில் ஜமாத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், இவர் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி ஆவார்.

    சமீபத்தில் இவரை பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் சிறை வைத்து இவருடன் மேலும் 4 பேர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதை எதிர்த்து ஹபீஸ் சயீத் மற்றும் மாலிக் ‌ஷபர் இக்பால், அப்துர் ரஹ்மான் அபித், ருயாசி சாகிப் உசேன், அப்துல்லா உபைது ஆகிய 4 பேர் லாகூர் ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்கள் சார்பில் சீனியர் வக்கீல் ஏ.கே. தோகர் வழக்கை தாக்கல் செய்தார்.

    சயீத் மற்றும் 4 பேரும் அமெரிக்காவின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் அடிப்படையில் அவர்களது எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் உள்துறை மந்திரி நிசார் அலிகான் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


    இதன் மூலம் இந்த அரசு அடிமைத்தனமாகவும், பிறநாட்டை சார்ந்து இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நாங்கள் நாட்டுக்காக சமூக சேவை பணிகள் செய்து வருகிறோம். அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பேரில் எங்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    எனவே வீட்டுக் காவலை ரத்துசெய்து எங்களை விடுதலை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீவிரவாதி சயீத் தேடப்படும் குற்றவாளி என அமெரிக்கா அறிவித்துள்ளது. அவரது தலைக்கு ரூ.6 கோடியே 80 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளது. ஏற்கனவே அவர் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். இவரை 2009-ம் ஆண்டு லாகூர் ஐகோர்ட்டு விடுதலை செய்தது.
    Next Story
    ×